free counter pro
Free Hit Counter
LIFE IS BEAUTIFUL: நான் மறுபடியும் வந்துட்டேன் ! ! I'm Back ! !

Sunday, October 26, 2008

நான் மறுபடியும் வந்துட்டேன் ! ! I'm Back ! !



அன்பு நண்பர்களே..

கடைசியாய் செப்டெம்பர் 15 அன்று ஒரு பதிவு எழுதிய பின்பு நான் வேறு பதிவுகளும் எழுதவில்லை

ஸ்ரீமதி, நாணல் மற்றும் பிற சகோதர சகோதரியரின் பதிவுகளுக்கும் கருத்து பதிவு செய்யவும் இல்லை..

ஏன்? ஏன்? ஏன்

நிம்மதியாத்தானே இருக்கோம்..

"ஏன்னு கேட்டமா? இல்லீயே அப்புறம் ஏன் ?"  என்று நீங்கள் என்னை கடிந்து கொண்டாலும்

உண்மையை சொல்ல வேண்டியது.....

என் கடமை..

சொல்றேன் கேளுங்க...

காரணங்கள் பின்வருமாறு...

1செப்டெம்பர்16 முதல் அக்டோபர் 4 வரை எனக்கு 12 Microsoft Certification Exams இருந்தது..
      அவையாவன
MCSE - SECURITY,
MCSA - MESSAGING,
MCTS-VISTA,
MCTS-BDD,
MCTS-WIN SERVER 2003 DEPLOYMENTபத்தாம் தேதி எழுதிய ஒன்றையும் சேர்த்து மொத்தம் 13 Microsoft Certification Exams clear செய்தேன்.

2. அது ஏன்டா ஒரே நேரத்தில் இவ்வளவு பரிட்சைபைத்தியமா உனக்கு?  என்ற உங்கள் கேள்வி புரிகின்றது.. 
  
விஷயம் ரொம்ப ஸிம்பிள்... நிம்மதியா சென்னைல இருந்த எனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்துவிட்டது...
  
அதுவும் CHEIF TECHNICAL OFFICER ஆக.. 
அட பரவாயில்லையே ,  ஓகே நம்மளையும் நம்பி வேலை கொடுக்காறாங்கன்னு நெனச்சேன்... 
ஆனா அவங்க
  "
என்னதான் உங்களுக்கு 4.5 வருட அனுபவம் இருந்தாலும்... எங்களுக்கு Certification Exams முடிச்சாதான் ஆச்சு  !!!! "என்று கேட்டதால் எழுதி தள்ளிவிட்டேன்.

3. என்னதான் பரிட்சை இருந்தாலும் பார்க்கிற வேலையை முடிச்சு கொடுக்கவேண்டும் அல்லவா, ஆகவே டபுள் ஷிப்ட்..
வேலை ஒரு நாளைக்கு சாதாரணமாய் அதிகமில்லை ஜென்டில்மென் சுமாராய் 16 - 18 மணிநேரம் மட்டுமே..
அக்டோபர் 5 அன்று எனக்கு லாஸ்ட் வோர்க்கிங் டே...

4.    அக்டோபர் 5 அன்றோடு சென்னைக்கு வணக்கம் சொல்லிவிட்டு, என் சொந்த ரான சேலம் வந்து சேர்த்தேன்... 
       சொல்ல மறந்துட்டேன்.. எங்கள் வீட்டில் INTERNET வசதி கிடையாது.. 
       வாங்கிக்கொள்ளலாம் என்று வீடு வந்து சேர்த்தேன், சென்னை வீட்டை காலி செய்து விட்டு...

5. சரி, நாட்டை விட்டு போரோமே, நம்ம கல்லூரி பேராசான்ளை சந்திப்போம் என்று சென்று ஆசி பெற்று வந்தேன்.. 
இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்த பின்பு AIRTEL நண்பர்களை சந்தித்த போதுதான் தெரிந்தது எங்கள் பகுதியில் BSNL  மட்டுமே BROADBAND SERVICE PROVIDERS என்பது... என்ன செய்வது, 10.10.2008 அன்று apply செய்த எனக்கு 25.10.2008 அன்று வெகு விரைவாக, புயல் வேகத்தில் இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.. 
சும்மா  சொல்லக்கூடாது..   அவங்க வேகமே வேகம்... சாதனைதான் போங்க...

6. இங்கு என் பள்ளி பிராயத்து நெருங்கிய நண்பன் ஒருவன் இருக்கிறான்.. விக்னேஷ்.. அன்பாக விக்கி.. எனக்கு மட்டும் எப்போதும் "மச்சான்" என் அடுத்த பதிவு எங்கள் நட்பை பற்றித்தான் என்பதால் நிறைய சம்பவங்களை சேர்த்து விரிவாக எழுதுகிறேன். அவனோடு நிம்மதியாக ஊர் சுற்றி திரிந்தேன்.. அவனுக்கு நான் தனியாக சிங்கப்பூர் போவதில் செம்ம கோவம், என்ன செய்வது, எனவே அவனையும் கூ ட்டிசெல்வதென எங்கள் மனம் முடிவு செய்து விட்டது ( நாங்க ரெண்டு பேரும்தான்.. வேற யாரும் இல்ல..)
இப்போ விசாக்காக வெய்ட்டிங்.. அதுவரை சொந்த ஊர் அட்டகாசம் பண்ண போரோம்.. ஒண்ணு கூடிட்டோம்.. இனி மத்வங்கதான் பாவம்...

7. எனவே, இனிமே முன்பு போல எழுதுவோம்... படிப்போம்.... மறுபடியும் எழுதுவோம், படிப்போம்... மறுபடியும்.. ஓகே ஓகே அதுதான் அதே தான்.

இரண்டு நாள் கழித்து ஏகன் பட விமர்சனத் தோட மீட் பண்ணுவோம்..

அது வரைக்கும்  உங்களிடமிருந்து விடை பெறுவது..

அடியேன் தான்..

வணக்கம்
                   
 வணக்கம் 
                                         
வணக்கக்கக்க்க்கம் ! ! ! ! 

7 comments:

Unknown said...

Welcome back anna..!! :))

Unknown said...

//ஏன்னு கேட்டமா? இல்லீயே அப்புறம் ஏன் ?" என்று நீங்கள் என்னை கடிந்து கொண்டாலும் //

நான் கேட்டேனே... :))

Unknown said...

அண்ணா சூப்பர்...:)) உங்க ஸ்டைல்ல திரும்ப வந்து பதிவு போட்டது+படிச்சது ரொம்ப சந்தோஷம்... இனிமேலும் தொடர்ந்து போடுங்க..!! :))))

"Its my world" said...

HI,

nice postin...& nic pic tooo
congrats for ur new job...omg u really need a lots of patience to study & write xams even after gettin in2 an job...i really wonder hw u were able balance both ur work & studies ;-)....do kp postin more....waitin to see many postings in this blog as well as in "kadhalay swasam".

cheers
bhavani eshu

YILAVEANIL said...

// ஸ்ரீமதி said...

Welcome back anna..!! :)) //

நன்றி தங்கையே ! ! !

//நான் கேட்டேனே... :))//

உண்மைதானம்மா.. ஆனால் அப்போது என்னால் பின்னூட்டம் போட முடியவில்லை...

அதற்கும் சேர்த்து ஒரு பெரிய SORRY ! ! ! !


//அண்ணா சூப்பர்...:)) உங்க ஸ்டைல்ல திரும்ப வந்து பதிவு போட்டது+படிச்சது ரொம்ப சந்தோஷம்... இனிமேலும் தொடர்ந்து போடுங்க..!! :)))) //

கண்டிப்பா..
இனி கொஞ்ச நாள் சும்மா தான இருப்பேன்.. வேற என்ன வேலை?
நிறைய எழுதுவோம்..


அன்புடன்

இளவேனில்

YILAVEANIL said...

// "its my world" said...

HI,

nice postin...& nic pic tooo
congrats for ur new job...omg u really need a lots of patience to study & write xams even after gettin in2 an job...i really wonder hw u were able balance both ur work & studies ;-)....do kp postin more....waitin to see many postings in this blog as well as in "kadhalay swasam".

cheers
bhavani eshu //

Thanks a lot mon ami..

Well I have a strange addiction towards Studies..

I like Learning something everyday..

So when I had a chance I wrote all those exams..

Planning to continue once when go abroad..

in my list are these:

MBA, Then 20 More Certification Examz, then Ph.D

Will surely write more..

Coz, i'm a free bird here @ home..

No office.. NO cooking.. no work nothing..

So will write more n post more regularly...

அன்புடன்

இளவேனில்

நட்புடன் ஜமால் said...

Congrats for getting a new job.

More Congrats on getting your certifications passed.

More happy to know that you are bringing your friend with you.

Friendship is not a word - but a worLd with Love.

All the best man.