
போன வாரத்து நொந்த குமாரன்..
அடியேன் தான்...
அதாகப்பட்டது..
நம்மை போல மென் பொருள் / கணிப்பொறி ஆசாமிகளுக்கெல்லாம்
முதல் வில்லன் யாருன்னா..
க்ளையண்ட்டு தான்..
போன வாரம் திங்கள் ஆரம்பிச்சு வெள்ளி வரை..
திருவாளர். சனிஸ்வர பகவான்,
என் கட்டத்துல குறுக்கா
கட்டில போட்டு படுத்துட்டார் போல..
இதுவரைக்கும் எந்த தொல்லையும் இல்லாம
போய்ட்டு இருந்த site ல எல்லாம்
இதுவரை கண்டிராத
வரலாறு காணாத
புத்தம் புது வகையான
பிரச்சனைகள்..
ஒரு இடத்துக்கு ஆள் அனுப்பி
அவர் அங்க என்னன்னு
பார்ப்பதற்குள்ள அடுத்த இடத்தில்
பிரமாண்டமாய் இன்னும் புதுசாய்
அடுத்த பிரச்சனை
சொப்பா இப்பவே கண்ணக்கட்டுதே ..
இன்னிக்கு திங்கள்தான்பா..
இன்னும் 4 நாள் ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...
அடுத்த இடத்துல
ஒரு அடிமை சிக்கிடான்னு
ஒரு ஐய்யா
கிட்ட தட்ட இரண்டு மணிநேரம் கதற கதற
ரொம்ப கஷ்டப்பட்டு அவரை சமாளித்து
தப்பிச்சு ஓடி வந்தா..
என் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தது
அடுத்த பெரிய குண்டு...
சரி அது நாளைக்குதான
பாத்துக்கலாம்னு ராத்திரி 11 மணிக்கு
முடியல....
செவ்வாய்க்கிழமை:
வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்
என்ற கனமான செய்தி அறிந்து மி
நான் ரொம்பவே ரசித்த ஒரு இசை
அவர் வயலின் பேசாத மொழி இல்லை..
தோடி வேண்டுமா.. கிடைக்கும்..
அமிர்தவர்ஷினியா .. நிச்சயமாக..
நடுவில்..
மதுரைக்கு போகாதடியா அதுவும்
அவர் இசையில் ஒரு பிக் பஜார்..
நமக்கு என்ன வேண்டுமோ அது கிடை
கனத்த மனத்தோடு ஒரு பதிவு எழுதி
சகோதரி ஸ்ரீ ( எ) ஸ்ரீமதி படித்து மிகவும்
என் பதிவுக்காக இல்லீங்க.. அவருக்காக..
பின் அன்று பெரிதாய் எதுவும்
ஒரு நாள் சோகமாய் கழிந்தது..
புதன் கிழமை காலையில் கொஞ்ச நேரம் அமைதியா போச்சு..
நானும் என் மற்றொரு ப்ளாக்கில்
ஒரு கவிதை ( அப்படித்தான் நினைக்கிறேன்..)
பதிவு செய்தேன்..
(சகோதரி நாணல் அதையும் படித்து
கருத்து பதிவு செய்திருந்தார்...
அவர் பெருந்தன்மை பொறுமைக்கு
ஒரு ஸ்பெஷல் நன்றி...)
என் மேஜையில் இருந்த தொலைபேசி
மெல்ல கனைத்தது..
எப்போதும் போல், எடுத்து
"சொல்லும்மா" என்றேன்.
சார் உங்கள பார்க்க ................. வந்திருக்கார்.. வரசொல்லவா???
''நல்ல தான போய்க்கி ட்டிருந்தது ..
ஆஹா இப்பதானடா
கொஞ்சம் சாஞ்சு உட்கார்ந்தேன்..."
சரி வரச் சொல்லு ...
வேற என்ன பண்ண முடியும்???
வந்தார் க்ளையண்ட்...
நான் : சார்.. காபி , டீ , ஜூஸ்.. என்ன சொல்லட்டும்...
அவர்: ஏதோ சூடா இல்லாம ஜில்லுனு சொல்லுங்க..
நான்: யப்பா உலக நடிப்புடா சாமி...
(நன்றி: நம்ம "Counter" மணி)
அடிப்படையில் நல்ல மனிதர் தான்..
ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்ற கோதாவில்
அடிக்கும் லூட்டி இருக்கிறதே..
சொல்லி மாளாது..
அவர் அந்த கால ப்ரொக்கிராமர்..
COBOL அவர் சொன்ன பேச்சைக் கேட்குமாம்..
இதை ரொம்ப பெருமையாய் சொல்லி
ஒரு லுக் விட்டார் பாருங்கள்... Terror Look
என்ன கொடுமை சார் இது...
ரொம்ப கஷ்டப்பட்டு அவரை சமாளித்
என் செல்பேசியில் நண்பர் அழைத்
பின்புதான் புத்தியில் உரைத்தது
அன்றைக்கு மாலை 5 மணிக்கு எனக்
மணி 4 தாண்டி
நான் எப்போதும் இல்லாத அதிசயமா
ஆட்டோ பிடித்து 5 மணிக்கு தேர்
தேர்வை நல்லபடியாக முடித்த
திரு
நண்பர்கள் வாழ்த்தினார்கள்..
பின் என் அலுவல் வரலாற்றில் முதல் முறையாக....
7 மணிக்கு வீடு வந்து சே
வியாழக்கிழமை:
பொழுது புலர்ந்தது..
அப்பா ஊரில் இருந்து வந்திருந்தார்..
அவருக்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு..
தோசை சுட்டுக் கொடுத்தேன்...
சாப்பிட்டு முடித்தார்..
நான் முழு நாள் விரதம் என்பதால்..
இரவு தான் உணவருந்துவேன்..
எனவே அப்பாவுக்கு மட்டும்..
இன்று மாதத்தின் இரண்டாம் வியாழன்..
அலுவலகத்தில் ஒரு Review Meeting நிச்சயம் இருக்கும்....
இன்று என்ன பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்து
என் அறைக்கு வந்து சேர்த்தேன்..
அன்று ஒரு குட்டிக் கதை கொஞ்சம் தத்துவம்
என்று முடித்தேன்..
அனைவரும் என் தேர்வு முடிவை அறிந்து கொண்டு
படாத பாடு படுத்தி எடுத்து விட்டனர்...
அப்பா வீட்டில் இருப்பத்தைச் சொல்லி
சீக்கிரமாய் பத்து மணிக்கு வீடு வந்து சேர்த்தேன்...
ஒரு வழியாய் இன்னொரு நாளை தள்ளியாச்சு....
வெள்ளிக் கிழமை
சொல்லி வைத்தார் போல,
திருவாளர். சனிஸ்வர பகவானோடு,
மற்ற தெய்வங்களும் சேர்த்து கொண்டு
என் கட்டத்தில் கபடி ஆட ஆரம்பித்து விட்டதை
கொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்...
பின்னே ஒரு நாளும் இல்லாத திருநாளாய்
மூன்று புது ஆர்டர்.. எல்லாம் Customized ERP Solutions..
ஏகப்பட்ட Customized Reports with MIS and SIS Requirements....
உடனே என் மேஜைக்கு வந்து சேர்த்து விட்டது..
ஆசை பட பிரகாஷ்ராஜ் போல வில்லங்கமாய் சிரித்தார்
மார்க்கேட்டிங் மேனேஜர்...
வேறு என்ன செய்வது..
ஹீ ஹீ செய்துடலாம் சார்.. என்றபடியே நான் நழுவப் பார்த்தேன்..
"க்ளையண்ட்ஸ் வந்திருக்காங்க சார்.."
"நீங்க பேசுங்க.." என்று அவர் எஸ்கேப்..
நான்.. பே என்று விழி பிதுங்கி ..ஒரு அடிமை சிக்கிட்டான்டான்னு
அப்புறம் என்ன அப்புறம்..
விழுப்புரம் தான்.. சே..
விழுப்புண் தான்...
வீடு வந்து சேர்ந்தப்போ
மணி வழக்கம் போல 11 தான்...
மீண்டும் பதிவின் தலைப்பை ஒரு முறை சத்தமாக படிக்கவும்...
சகோதரி நாணல், என்னையும் நம்பி
ஏதோ எழுதுறேன்னு சொல்லி
வியாழக்கிழமை எனக்கு ஒரு விருதையும்
கொடுத்திருக்காங்க..
ஆனா..
அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சதென்னவோ
நேத்திக்குத்தான். (திங்கள்)
ரொம்பவே நொந்து நூடில்ஸ் ஆனேன்...
தயவு செய்து மன்னித்து விடுங்கள் சகோதரி...
10 comments:
அச்சோ ஒருத்தருக்கு இவ்வளவு கஷ்டங்களா... :(
தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க எழுதிருந்த விதம் நல்லா இருந்திச்சு... ரசித்து படித்தேன்... :)
விடுங்க வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்...
// naanal said...
வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்.. //
அது வீரனுக்கு..
ஏன்டா தம்பி.. இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டிருக்கு ???
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பு...
அதான் உங்களுக்கு தெரியுமே..
அதேதான்...
//அப்பா ஊரில் இருந்து வந்திருந்தார்..
அவருக்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு..
தோசை சுட்டுக் கொடுத்தேன்...
சாப்பிட்டு முடித்தார்..
நான் முழு நாள் விரதம் என்பதால்..
இரவு தான் உணவருந்துவேன்..
எனவே அப்பாவுக்கு மட்டும்..//
எனக்கு இந்தப் பதிவிலேயே பிடிச்சது இதுதான் அண்ணா..!! :)) (Plz dont mistake me) எனக்கும் கூட இப்படி எல்லாம் செய்யனும்னு ஆசை..!! ம்ம்ம்ம் பார்க்கலாம்..!! ரொம்ப பொறுப்பான உங்களைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..!! :))இது நிஜம்மாவே உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்காது..!! :))
சாரி அண்ணா உங்கள் கவிதைகளை இதுவரை நான் படிச்சதில்லைன்னு நினைக்கறேன்..:( நிச்சயம் படிக்கிறேன்..!! :)
//naanal said...
அச்சோ ஒருத்தருக்கு இவ்வளவு கஷ்டங்களா... :(
தப்பா எடுத்துக்காதீங்க.. நீங்க எழுதிருந்த விதம் நல்லா இருந்திச்சு... ரசித்து படித்தேன்... :)
விடுங்க வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்...//
அக்கா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு..!! :))
//நான் முழு நாள் விரதம் என்பதால்..
இரவு தான் உணவருந்துவேன்//
அட நம்ம கேரக்டர்லயே ஒருத்தரா இண்ட்ரஸ்டீங்க இருக்கே!
அழகாய் இருக்கு!
டைரிக்குறிப்புக்கள் மாதிரி!
நானும் டிரைப்பண்ணாலம்ம்ன்னு யோசனை வந்தாலும் அட என்னங்க நடக்குது டெயிலி இம்புட்டு எழுதுற அளவுக்கு :(((
அன்பு தோழர் ஆயில்யன் முதன்முறையாக
பின்னூட்டம் எழுதியது கண்டு
நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்...
ஆயில்யன் said...
//அட நம்ம கேரக்டர்லயே ஒருத்தரா இண்ட்ரஸ்டீங்க இருக்கே!//
அடடே அப்படியா???
//அழகாய் இருக்கு!//
மிக்க நன்றி
//டைரிக்குறிப்புக்கள் மாதிரி!//
இது டைரி குறிப்பெல்லாம் இல்ல நண்பரே..
ஒரு வாராமாய் பட்ட பாடு..
சும்மா படிக்கிறவங்க
சிரிக்கட்டுமேன்னு
இப்படி பதிவு போட்டேன்...
//நானும் டிரைப்பண்ணாலம்ம்ன்னு யோசனை வந்தாலும் அட என்னங்க நடக்குது டெயிலி இம்புட்டு எழுதுற அளவுக்கு :(((//
பார்றா பார்றா
தோழரின் பெரும் பணிவை...
நீங்க எவ்ளோ விஷயம்
எழுதறீங்க....
இன்னும் கலக்குவீங்க...
வருக தோழரே...
இனி அடிக்கடி வருக....
அன்பு நட்புடன்
இளவேனில்
//எனக்கு இந்தப் பதிவிலேயே பிடிச்சது இதுதான் அண்ணா..!! :)) //
நன்றி ! ! ! நன்றி ! ! ! !
//(Plz dont mistake me) //
I Wont and I Cant.. :-)
//எனக்கும் கூட இப்படி எல்லாம் செய்யனும்னு ஆசை..!! ம்ம்ம்ம் பார்க்கலாம்..!! //
வெகு விரைவில் நிச்சயம் நடக்கும்...
//ரொம்ப பொறுப்பான உங்களைப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு..!! :))//
அப்படியா..
அப்படி தெரியவில்லையே
//இது நிஜம்மாவே உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்காது..!! :)) //
சகோதரி...
நான் சமைப்பது பற்றி
நீங்கள் மிகவும் சிலாகித்து
எழுதி இருப்பதில்
மிக்க மகிழ்ச்சி..
எனக்கு சமையல் மிகவும்
பிடித்த ஒரு விஷயம்
என்பதால் ரசித்து செய்வது வழக்கம்..
சாரி அண்ணா உங்கள் கவிதைகளை இதுவரை நான் படிச்சதில்லைன்னு நினைக்கறேன்..:( நிச்சயம் படிக்கிறேன்..!! :) //
இல்லையம்மா.. நீங்கள்
படித்து பின் கருத்து பதிவும்
செய்திருந்தீர்கள்.. நன்றி
அன்புடன்
இளவேனில்
HI,
read all ur latest posts, as usuall u rock!!!!!! & i'm fine thank you. was lil busy, tats y i was not able post for a while...will b postin shortly :)
this posting was amazing yaar :))
வேற யாரு..
போன வாரத்து நொந்த குமாரன்..
அடியேன் தான்... (ha ha ha...hey it was a gud start i must say!!!! )
the way u have compiled this posting is classy!!!
though this posting seemed to be hillarious, it also shows how you were sweating out over the whole week :(... its nice tat u've taken it light!!!!!
kp postin more
Cheers
Bhavani Eshu
//சகோதரி...
நான் சமைப்பது பற்றி
நீங்கள் மிகவும் சிலாகித்து
எழுதி இருப்பதில்
மிக்க மகிழ்ச்சி..//
அண்ணா நான் உங்க சமையல மட்டும் சொல்லல.. அப்பாவுக்கு செஞ்சதையும் சேர்த்துதான் சொன்னேன்..!! :))
பதிவும் போடல... போட்ட பின்னுட்டத்துக்கு பதிலும் போடல.. ரொம்ப பிஸியா அண்ணா?? :))
Post a Comment