free counter pro
Free Hit Counter
LIFE IS BEAUTIFUL: என் ஆசிரியர்களுக்கு...

Friday, September 05, 2008

என் ஆசிரியர்களுக்கு...




இன்று ஆசிரியர் தினம்..

நாம் வாழ்வில் உயர வழி காட்டும் தெய்வங்களை
ஒரு நாளாவது நினைத்து பார்க்க வேண்டும் 
என்றே இந்த நாளைக் கொண்டாடுகின்றோம்..

இந்த பதிவு..

என் வாழ்வின் மிக சிறந்த ஆசான்ளை பற்றியது..

இவர்கள் என் வாழ்வில் எனக்கு கிடைத்தது
நான் செய்த புண்ணியம் என்றே கருதி வாழ்கிறேன்..

இன்று ஒரு நிறுவனத்தின் உயர்ந்த பொறுப்பில்
நான் இருந்தாலும்..

என் ஆசிரியர்களுக்கு இன்னும் நான் அதே மாணவன்தான்..

என் பள்ளிப் பருவ ஆசிரியர்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன்..

நான் முதலாம் வகுப்பு படித்த போது,
என் கையைப் பிடித்து எழுத வைத்த
புஷ்பமாலா  மிஸ்..

இரண்டாம் வகுப்பில் இருந்து நான்காம் வகுப்பு வரை
கணக்கில் நூற்றுக்கு நூறு எடுக்க வைத்த
என் மீது அளவிற்கரிய பாசம் வைத்த
சாயிப்ரபா மிஸ்...

எப்போது போய் எப்படி தொல்லை செய்தாலும்
பொறுத்து ரசித்த எங்கள் பள்ளி நூலக ஆசிரியை
ராதா மிஸ்...

ஆங்கிலத்தை அழகாய் அறிமுகம் செய்த
E.S. உஷா ராணி மற்றும்  M.P. ராஜேஷ்வரி

ஆங்கிலத்தை சொந்தமாய் எழுதத்தூண்டிய
அசோகன் சார் மற்றும் ராதா கிருஷ்ணன் சார் 

முதன்முதலில் கம்ப்யூட்ர் பக்கமாய்
என் ஆர்வத்தை வளர்த்த யுவராஜ் சார்

பதினொன்றாம் வகுப்பில் எனக்கு கிடைத்த
அறிவு புதையல், அன்பின் இமயம்
தலைமை ஆசிரியை பெர்னிஸ் ஜார்ஜ் மேம் அவர்கள்..

கல்லூரிக் காலத்தில் எனக்கு இன்னொரு தாயாக
இருந்து என்னை மகன் என்றே மற்றவர்க்கு
அறிமுகப்படுத்திய அன்பு தெய்வம் 
என் தெய்வத்தாய் ராணி அம்மா...

அதே கல்லூரி நாட்களில் என்
அனைத்து புது முயற்சிகளுக்கும்
உறுதுணையாய் இருந்து இன்றும்
என் மீது நீங்காத அன்பு வைத்து
எப்போதும் ஆசீர்வதிக்கும்..
பானு மேம்,
சசி மேம்,
செந்தில் குமார் சார்
சந்திர குமார் சார்
லூயிஸ் டீ சௌஸா சார்
கண்ணப்பன் சார்
ராஜ் குமார் சார்
மற்றும் பல துறைளை சார்ந்த ஆசிரியர்கள்..

என்னை NCC யில் சேரச் சொல்லி
கட்டுக்கோப்பான ராணுவ வீரனாய் 
மாற்றிய என் NCC ஆசிரியர்கள்
பால முரளி சார் மற்றும் விஜிலேஷ் சார்

என் ஆன்மீக தேடல்களுக்கு வழிகாட்டியாய்
இருந்து, யோக சூட்சுமங்களையும்,
மனக்கட்டுப்பாட்டயும், தேடலயும்,
விடைக்ளையும் காணக் கற்றுத் தந்த
என் யோகா ஆசான் கைலாச நாதன் அவர்கள்....

பின்னாளில் சென்னை வந்த பின்பு
எனக்கு  Visual Studio.Net கற்பித்த
பிரியா மேம்

மற்றும் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில்
எப்படியோ வந்து எனக்கு ஏதாவது படம் சொல்லித்தந்த
எவ்வோ ஆசிரியர்கள் அனைவருக்கும்

இரு கரம் கூப்பி..
சிரம் தாழ்த்தி..
கண்ணில் நீர் திரள
வணங்கி
நன்றி உரைக்கின்றேன்..

நன்றி ! ! !  நன்றி ! ! ! நன்றி ! ! !

எங்களை வாழ்வின் உயரத்திற்கு உயர வைத்து
இன்னும் ஏணியாகவே இருந்து
பலரையும் உயர்த்தும் 
அன்பு தெய்வங்களே..
வாழ் நீங்கள் பல்லாண்டு..
உங்கள் நலனுக்காக 
நித்தமும் இறைவனை வேண்டுவேன் யான்..


அனைவருக்கும் மேலாக,

எனக்கு புத்தகம் படிக்கும் 
பழக்கத்தை ஏற்படுத்தி
கேட்டபோதெல்லாம்
புத்தகம் வாங்கி தந்து,
உலகறிவே உயர்வறிவு
என்று நெறிபடுத்தி
உயரவைத்து,,
என்னை
இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய
என் இதய தெய்வங்கள்..
என் அன்புத்தாய்க்கும் , தந்தையார்க்கும்

என் பணிவான வணக்கங்களை
அவர்களின் பொற்பாதங்களுக்கு
பணிவண்புடன்
சமர்பிக்கின்றேன்...


நன்றி ! ! !

4 comments:

Unknown said...

அண்ணா சூப்பர் பின்னிட்டீங்க.. நீங்க போட்ட இந்த பதிவிற்கு என் கவிதை கால் தூசிக்கு சமம்....!! :)) முழுவதும் படிக்க இப்பொழுது நேரம் இல்லாததால் மன்னிக்கவேண்டுகிறேன்..!! :( நிச்சயம் படித்து திங்கள் விரிவான பின்னூட்டமிடுகிறேன் அண்ணா தவறாகக் கருதவேண்டம்..!!

Anonymous said...

Man

Your Teachers are damn lucky to have a a humble student like you..

Yo Man.... You are too good dude..

Guess You reached the Top Soon because of their Blessings only..

GOD BLESS YOU..

YILAVEANIL said...

வருகைக்கு நன்றி...

// அண்ணா சூப்பர் பின்னிட்டீங்க.. நீங்க போட்ட இந்த பதிவிற்கு என் கவிதை கால் தூசிக்கு சமம்....!! :)) //

நிதானமாக நேரம் கிடைக்கும் போது பின்னூட்டமிடுங்கள்..


//முழுவதும் படிக்க இப்பொழுது நேரம் இல்லாததால் மன்னிக்கவேண்டுகிறேன்..!! :( //


பரவாயில்லை..
மன்னிப்பு கேட்க வேண்டிய அளவு ஏதும் இல்லை


//நிச்சயம் படித்து திங்கள் விரிவான பின்னூட்டமிடுகிறேன் அண்ணா தவறாகக் கருதவேண்டம்..!!??//

நிதானமாக நேரம் கிடைக்கும் போது..

Unknown said...

படிச்சுட்டேன் அண்ணா..!!
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு..!!இப்படி ஒரு மாணவன் கிடைக்கப்பெற்ற அவர்களும் கொடுத்துவைத்தவர்கள் தான்..!! :))