free counter pro
Free Hit Counter
LIFE IS BEAUTIFUL: Wall - E, A Must Watch Movie

Thursday, September 04, 2008

Wall - E, A Must Watch Movie





வணக்கம்...

போன முறை நான் 'சத்யம்' படம் பார்த்து நொந்த கதை நீங்கள் அறிந்ததே..

நேற்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விடுமுறை 
என்பதால் கொஞ்சம் , அமர உட்கார்ந்து, போன வாரம் வியாழக்கிழமை
என் அன்பு நண்பர்கள் ரவி, அபி, கே.பி, விஜி, ரமேஷ், பிரபு,முரளி ஆகியோருடன்
inox ல் வால் -  (WALL-E) படம் பார்த்த நினைவுகளை 
சற்றே அசை போட்டு மகிழ்த்தேன்....

நண்பர்கள் அனைவருடனும் படம் பார்ப்பதே 
ஒரு சுகானுபவம்..

அதிலும், இந்த நட்பு வட்டம் 
எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்....

திடீரென்று எவ்வித முன்னறிவிப்பின்றி 
படம் பார்க்க போவதே எங்கள் வழக்கம்..

அன்றும் அது போலவேதான்... 
திடீர் திட்டம்.. உடனே படம்...

சரி.. இனி படத்தைக் கொஞ்சம் அலசுவோம்..

பிக்ஸர் (Pixarஅன்பர்கள்
சுமார் 180 மில்லியன் டாலர் செலவில்
( இதுதான் அவர்கள் தயாரிப்பிலே 
மிக அதிக செலவில் எடுக்கப்பட்ட படம்
எடுத்துள்ள படம்தான் வால் - இ..

கதை, வேறென்ன காதல்தான்... 
ஒரு சின்ன வித்யாசம்.. இதில் காதலர்கள் இரண்டு ரோபோக்கள்..
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல.. 
அதையும் தாண்டி இயந்திரக்காதல்..

வருடம்: கி.பி. 2815:

 
நாம் வாழும் இந்த உலகம் மனித வாழ முடியாத அளவுக்கு
 இயந்திரக் குப்பைகளும், மற்ற ப்ளாஸ்டிக், இன்ன பிற குப்பைகளும் நிறைந்த ஒரு இடமாக மாறி இருக்க, ஏழ்நூறு வருடங்களாக மனிதர்கள் விண்வெளியில்
 ஒரு மாபெரும் விண்வெளிக் கப்பலில்,
பல்வேறு வகையான ரோபோக்கள்
 உதவியுடன் வாழ்கிறார்கள்..

இங்கே உலகில், நம் கதையின் நாயகன்
 வால் - இ குப்பைகளை சதுர வடிவ செங்கல் போலே திரட்டி அடுக்கி 
வைத்துக் காலம் கழிகின்றார்சாரி.. கடமையைச் செய்கின்றார்.. பல்லாண்டுகால உலக வாழ்வில்
பல உணர்வுரீதியான விஷயங்களை  புரிந்து கொள்ளும் வால் - இ,
 பொம்மைகளையும், மற்றும் பல பொருட்களையும் சேர்த்து வைக்கிறது..  தனக்கென்று ஒரு நண்பனையும் தேடிக்கொண்டு
தினமும், 1969 ல் வந்த,  "Hello dolly" படத்தில் வரும் 
  "Put on Your Sunday Clothesand
 "It Only Takes a Momentபாடல்களை பார்த்து,
உணர்வுகளை வளர்த்துக்கொள்கிறது...  

 வால் -  யின் நண்பர் யாரென்று சொல்ல மறந்துவிட்டேன்..
  ஒரு கரப்பான்பூச்சி... 

ஒரு நாள், புதிதாக வருகிறது ஒரு பெண் ரோபோ, பெயர்   "வா"  அழிந்த உலகில் ஏதாவது உயிர்கள் உள்ளதா
 என்று பார்ப்பதற்காக மனிதர் வாழும் கப்பலில் 
இருந்து வருகின்றது.

ஈவாவைக் கண்டதும் காதல் கொள்கிறது வால் - இ.

வால் - , வா உடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளும்
 காட்சிகள் மற்றும்,
 ன்னுடைய அன்பை புரிய வைக்க படும் பாட்டை 
வெள்ளிதிரையில் காண்க..

எவ்வித உரையாடலும் இல்லாத முதல் 40 நிமிடங்கள்.. 
விவரிக்க வார்த்தை இல்லை.. பாருங்களேன்..
ரசிப்பீர்ள்.. ஒரு மௌன புன்னகையுடன்...

ரோபோ க்கள் பேசும் காதல் மொழி
அவற்றின் பெயர் தான்...
வால் - ... வா.. என்று இரண்டும் ஒன்றை ஒன்று 
வாஞ்சையுடன் அழைத்துகொள்வது 
இனிய கவிதை..

பெயர்களை அழைக்கும் விதத்தை வைத்தே
 அந்த காட்சிக்கான உணர்வுகளை
 நம்மால் புரிந்து கொள்ள முடிவது...   
அற்புதமான யுக்தி...

ன் கப்பலில் தன்னைத் தேடி வந்து நிற்கும் 
வால் - இயை பார்த்து, ஆச்சரியம், பரிதவிப்பு, மகிழ்ச்சி, பயம் என்று கலவையான அத்தனை உணர்வுகளையும்... 
 "வால் - இ... " 
என்று அழைக்கும் ஒற்றை சொல்லில் காட்டுகிறது ஈவா.. 

முக்கியமாய், ஈவா..  வெட்கப் படுவது..
 யப்பா.. கண்கொள்ளாக்காட்சி...

இன்னும் விளக்கமாய், காட்சிகளைக் கூட விவரித்து எழுத ஆசைதான்..

ஆனால், நீங்களே படம் பார்ப்பது
பார்த்து, கேட்டு, கண்டு ரசித்துக் களிப்பது.. 
இன்னும் சுவையான அனுபவமாய் இருக்கும்...

இது நிச்சயமாய், பார்க்க வேண்டிய ஒரு படம்... 
தயவு செய்து பாருங்கள்...


படத்தின் மிக சிறந்த காட்சிகள்:

1. வால் - இ கண்டெடுக்கும் மோதிரப் பெட்டியில் மோதிரம் இருக்க
அதை விட்டு விட்டு, பெட்டியை பத்திரப் படுத்துவது...

2. வால் - இ மெல்ல மெல்ல ஈவா அருகில் நகர்ந்து உட்கார்வது.. 

3. மிகுந்த போராட்டத்திற்கு பின்னே வால் - இ, ஈவாவை காணும் போது, நெகிழ்ச்சியான குரலில் காதலுடன் "ஈவா..  " என்று அழைப்பது...

4. ன் கால் சக்கிரத்தில் சுங்கி கரப்பான்பூச்சி இறந்து விட்டதோ என்று  வால் - இ பதறுவது..

5. வால் - இ விண்கலத்தில் மாட்டிக் கொண்டு போராடும் கணத்தில்
ஈவா பாய்ந்து பறந்து, காப்பாற்ற ஓடுவது, சாரி, ப்பது...

6. கொட்டும் மழையில் ஈவா நனைந்து விடாமல் வால் - இ 
குடை பிடித்தபடி காத்திருப்பது

7. விண்வெளியில் வால் - இ,  ஈவா ஆடும் நடனம்..

8ஈவாவின் கரம் கோர்க் வால் - இ முயற்சிக்கும் தருணங்கள்...

9வால் - இயை பார்த்து ஈவா வெட்கப்படும் காட்சி..

10. தான் அழிந்தாலும் பரவாயில்லைசெடியைக் காப்பாற்றி
 ஈவாவின் கடமை நிறைவேற வேண்டும் 
என்று  போராடும் வால் - இ

இப்படி பல பல காட்சிகள்.. எதைச் சொல்ல எதை விட 
என்று தடுமாறிப் போகிறேன்...

படத்தின் முடிவில், நம்மையும் அறியாமல்
நம் கடைவிழியோரம் இரு சொட்டு கண்ணீர் வழியுமே..

அதுதான் காதலின்  வெற்றி...

நிச்சயம் பார்க்க வேண்டிய அருமையான படம்: Wall-E


பி.கு: போகிற போக்கைப் பார்த்தால்.. பின்னாளில்
 காதல் மறைந்து போய்விடுமோ என்று
நான் நம் பிற்கால சந்தியினரை எண்ணி பயந்ததுண்டு.. 
ஆனால், காதல் என்றும் அழியாது, அது, நமக்கு நம்மை மீண்டும் ஏதோ ஒரு வழியில்
 அடையாளம் காட்டும் என்று இன்று நம்பிக்கை வந்து விட்டது.
இயந்திர ரோபோக்கள் பின்னாளில் காதல் வயப்படும் என்றால், நிச்சயம், மனிதரும் காதலை மறக்க மாட்டார்கள்
 என்றே நம்பிக்கைக் கொள்வோமாக...



5 comments:

"Its my world" said...

Hi,

Thanks for your comments, i'm really very happy to know that your going to spend some more time with your mamma after reading my post!!!...tats really nice to hear

hmmm well regaring your post on WALL-E, as usuall your review compilation was toooo good & intresting toooo!!! i havent watched this kinnda movie b4, rite frm the script the characters evrythng was diffrent. i think i need not watch the movie coz ur narration was in such a way tat, each & evry scene kps running in my mind as read ur review!!!!...& ur endin was beautiful!!!

kp postin more:)

Cheers
Bhavani eshu

YILAVEANIL said...
This comment has been removed by the author.
YILAVEANIL said...

/ "its my world" said...
Hi,

Thanks for your comments, i'm really very happy to know that your going to spend some more time with your mamma after reading my post!!!...tats really nice to hear

hmmm well regaring your post on WALL-E, as usuall your review compilation was toooo good & intresting toooo!!! i havent watched this kinnda movie b4, rite frm the script the characters evrythng was diffrent. i think i need not watch the movie coz ur narration was in such a way tat, each & evry scene kps running in my mind as read ur review!!!!...& ur endin was beautiful!!!

kp postin more:) //


Dear Bhavani..

Pls Watch This Movie Once You Will Love it For Sure..

Then You will Be a Great Fan For Animation Movies...

Smiles

Yilaveanil

Unknown said...

இந்த படத்த பத்தி கேள்வி பட்டேன். ஆனா இன்னும் பார்க்க சந்தர்பம் கிடைக்கல..!! :( அதைப் பத்தின இந்த பதிவு பார்க்கும் ஆசையை இன்னும் தூண்டியிருக்கு.. நீங்க எழுதிருக்கற விமர்சனம் சூப்பர்..!! :))

YILAVEANIL said...

// Sri said...
இந்த படத்த பத்தி கேள்வி பட்டேன். ஆனா இன்னும் பார்க்க சந்தர்பம் கிடைக்கல..!! :( அதைப் பத்தின இந்த பதிவு பார்க்கும் ஆசையை இன்னும் தூண்டியிருக்கு.. நீங்க எழுதிருக்கற விமர்சனம் சூப்பர்..!! :))//


கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்..

தயவுசெய்து பார்க்க முயற்சி செய்யவும்..

மனதில் ஆழமாய் பதிந்து விட்ட படம்..

இது வெறும் புகழ்ச்சியில்லை..

பார்த்தபின்னே நீங்களும் மனம் நெகிழ பாராட்டுவீர்கள்